கற்பிட்டியில் சுயதொழில் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும் நாளை
(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பு பயிற்சி பட்டறையை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் திங்கட்கிழமை (25) காலை 08 மணிக்கு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற உள்ளது.
இந் நிகழ்வில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும் மேற்படி பயிற்சி பட்டறையின் பிரதான நோக்கங்களாக பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் புதிய வகையான உணவுகளை அறிமுகப்படுத்தல் ஆகும் என கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தி நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முனாஸ் தெரிவித்தார்.
No comments