கலாநிதியானார் அஷ்ஷெய்க் பீ.நிஃமத்துல்லா (நளீமி)
மன்னார் கரடிக்குளியை பிரப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட ஆங்கில ஆசிரியரும் நளீமியா பட்டதாரியுமான அஷ்ஷெய்க் பீ. நிஃமத்துல்லா தனது கலநிதிப் பட்டப்படிப்பை மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் "மொழியியல்" துறையில் நிறைவு செய்து கடந்த 30-11-24 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 64 வது பட்டமளிப்புவிழாவில் தனது கலாநிதிப் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை கரடிக்களி அ.மு.க. பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை முசலி ம.வி. திலும், ஆங்கில மொழி மூலம் கற்கை நெறியை கண்டி, இடைநிலைக் கல்வியை கல்முனை நாம்புளுவ போன்ற இடங்களிலும் பின்னர் கல்முனை ஸாஹிரா கல்லூரியிலும் கற்றார்.
1986 ல் உயர் இஸ்லாமிய கற்கைக்காக நளிமியாவில் இணைந்துகொண்ட இவர் தனது பட்டப்படிப்பை (1 st class) முதலாம்தர தகைமையுடன் 1993 ல் நிறைவுசெய்தார். தனது நளீமியா கற்கையை நிறைவு செய்தார்.
ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் கலைமானி கற்கையினை பேராதெனிய பல்கலைக்கழகத்திலும் முதுமானிக் கற்கையினை "ஆங்கில மொழியியலில் " களனி பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து 50ஆவது வயதில் கலாநிதி கற்கைக்காக மலாயாப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட இவர் தனது 56 ஆவது வயதில் தனது கலாநிதிக் கற்கையைப் பூர்த்தி செய்து கல்விக்கு வயதோ பொருளாதாரமோ குடும்பச் சுமைகளோ தடைஇல்லை என்பதை உலகிற்கும் இளம் சமூகத்திற்கும் எடுத்துரைத்துள்ளார்.
இவரை மனமாற வாழ்த்துவதில் மதுரங்குளி இணையதளம் பெருமிதம் கொள்கிறது.
No comments