புத்தளம் லிட்ல் ஏன்ஜல்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த கலை விழாவும், கண்காட்சியும்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் லிட்ல் ஏன்ஜல்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த கலை விழாவும், கண்காட்சியும் புதன்கிழமை (27) காலை புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
பாடசாலை பொறுப்பாசிரியை அநோஜா ஏன்ஜலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் கல்வி பயிலும் 20 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.
இதன் போது நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் புத்தளம் ஸ்ரீ விசுத்தாராம பௌத்த மத்திய நிலைய விகாராதிபதி மஹகம சுதஸ்ஷி ஹிமி, கம்பஹா அத்துல வன்ஸ ஹிமி, புத்தளம் சாந்த அன்றூஸ் மத்திய கல்லூரியின் உதவி அதிபர் நிலாந்தி, ஆசிரியைகளான சந்தியா, தனோஜா, இரோஷினி, புத்தளம் நகர முன்பள்ளி ஆசியைகள் சம்மேளன தலைவி அமிதா எதிரிசிங்க, உறுப்பினர்களான ரூஸி சனூன், நிலங்கா தில்ருக்ஷி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments