புத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கான பாடசாலையில் விஷேட வைபவம்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் மாற்று திறனாளிகளுக்கான அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற மிகப் பெரிய நோக்குடன் (23) சனிக்கிழமை புத்தளம் சவீவபுரத்தில் இயங்கி வரும் நகர சபைக்கு சொந்தமான மாற்றுத்திறனாளிகளுக்கான பாடசாலையில் விஷேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பிள்ளைகள் மிக சந்தோசத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் சான்றிதழ்கள் பரிசு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மற்றும் இதில் கடமை புரியும் ஆசிரியைகளையும் அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளை கெளரவப்படுத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி ஏ.எம்.நௌசாத், ஆசிரியர் எம்.ஓ.ஜே.நிஜாம் மற்றும் முஹம்மது முஜிபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments