எம்.எஸ்.தௌபீக்குக்கு மக்கள் பலத்த ஆதரவு, செல்லுமிடம் எங்கும் அமோக வரவேற்பு...!
திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையைவிட அதிக போட்டி நிறைந்தாகக் காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட புதிய முகங்கள் பல ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட சுயாதீன கள ஆய்வில் இம்முறை திருமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் அதிக விருப்பு வாக்குகளை எம்.எஸ். தௌபீக் பெற்றுக்கொள்வார் என்பதை இலகுவாக கணிக்க முடிவதுடன், அவருக்கு மக்களின் பலத்த ஆதரவுடன் செல்லுமிடம் எங்கும் அமோக வரவேற்பும் காணப்படுகிறது.
இதற்கு, தனது பாராளுமன்ற காலத்தில் மக்களுக்காகச் செயற்பட்டமை, திருமலை வரலாற்றில் அதிக அபிவிருத்திகளை மேற்கொண்டமை, ஊழலற்ற அரசியல், மக்களுடன் நெருக்கமாக பழகுதல், முஸ்லிம் நாடுகளுடன் நெருங்கிய உறவுகள் கொண்டுள்ளமை, நமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகபாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது மட்டுமல்லாமல், ஆக்கபூர்வமான முயற்சிகளைச் செய்தமை, தனது தேர்தல் பரப்புரைகளில் யாரையும் தரக்குறைவாக விமர்சித்தோ நையாண்டித்தனமாகப் பேசியதையோ நாம் அவரிடம் காணவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருமலை மாவட்டத்திற்கான இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் மாத்திரமே காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
No comments