Breaking News

ஐக்கிய ஜனநாயக குரல் மைக் சின்னம் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஆப்தீன் எஹியாவின் வெற்றிக்கான வீட்டுக்கு வீடு பிரச்சாரம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

புத்தளம் நான்காம் கட்டை மற்றும் எட்டாம் கட்டை கிராமங்களுக்கான ஐக்கிய ஜனநாயக குரல் மைக் சின்னத்தின் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஆப்தீன் எஹியாவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வீட்டுக்கு வீடு பிரச்சார வேலைத்திட்டம் இக் கிராம மகளீர் அமைப்புக்களின் தலைவிகளான றிஸ்வானா மற்றும் நபுரா அகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி அதன் தலைவர் ரன்ஜன் ராமநாயக்க மற்றும் செயலாளர் நாயகம் திலகரத்ன தில்ஷான் ஆகியோரின் வழிநடத்தலில் ஊழல் அற்ற புதிய தலைமைத்துவத்துடன் வெற்றியை நோக்கி பயணிக்கும் இத் தருணத்தில் புத்தளம் மாவட்டத்தில் பல தரப்பினரும் தன்னோடு கைகோர்த்து வருவதாகவும் இந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் முனைப்போடு தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்க் கொண்டு வருவதாகவும்  கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










No comments

note