Breaking News

அரசியல் எனக்கு தொழில் அல்ல அது ஒரு சேவை கற்பிட்டியில் தராசு கூட்டணியின் காரியாலய திறப்பு விழாவில் அலி சப்ரி றஹீம்

(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டியில் தராசு கூட்டணியின் தேர்தல் பிரச்சார காரியாலய திறப்பு விழா கற்பிட்டியை பிரதிநிதித்துவப் படுத்தும் எச்.எம்.எம் பர்ஸான் தலைமையில் வியாழக்கிழமை (31) இரவு  இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தராசு கூட்டணியின் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் அலி சப்ரி றஹீம் மற்றும் அவருடன் கூட்டணியில் போட்டியிடும்  ஏனைய வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் உரையாற்றிய தராசு கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அலி சப்ரி றஹீம் ;

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் எவ்வாறு ஒற்றுமைபட்டு சிறுபான்மை சமூகத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்டோமோ அவ்வாறே இன்ஷாஅல்லாஹ் தராசு கூட்டணியை மக்கள் இம்முறை வெல்ல வைத்நு சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு . மேலும் அரசியல் என்பது எனக்கு தொழில் அல்ல அது ஒரு சேவை எனக்கென்று தொழில் உண்டு அதனூடாகவும் மக்களுக்கு நிறையவே சேவை செய்துள்ளேன் செய்து வருகின்றேன் இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து செய்வேன் எனவும் தெரிவித்தார்.









No comments

note