Breaking News

அஷ்ஷெய்க் உமர் தீன் ரஹ்மானி எழுதிய நூல் வெளியீட்டு விழா

பன்நூல்  ஆசிரியரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவரும், கண்டி தாருல் உலூம் அல் புர்கானிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளரும், மடிகே மிதியால பாத்திமதுஸ் ஸஹ்ரா மகளிர் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகருமான அஷ்ஷேக் எச் உமர் தீன் ரஹ்மானி அவர்கள்  தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஆகிய மொழிகளில் எழுதிய சுமார் 14 நூல்கள் அறிமுகம் செய்து வெளியிடப்பட்ட விழா நிகழ்வு நேற்று (09) சனிக்கிழமை மஃரிப் தொழுகையை அடுத்து மடிகே மிதியால பாத்திமதுஸ் ஸஹ்ரா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நூலாசிரியர் தலைமையில்  வெகு சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அல்ஹாஜ் அஸ்ரப் அன்வர் அவர்களும் மிதியால ஜாமி உல் ஹைராத் ஜும்மா பள்ளிவாசல் கௌரவத் தலைவர் ஜனாப் எம் எஸ் எம் முஹ்சீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


ஷாம் மௌலானா

திவுரும்பொல













No comments

note