அக்குரணை வெள்ள அனர்த்தம், யார் பொறுப்பு ? ஓர் ஆய்வு.
அக்குரணை வெள்ள அனர்த்தம் என்பது தேர்தல்கால பிரச்சாரம் என்பதனால் இதன் உண்மைத்தன்மை பற்றி அரசியல் சாராத பல்கலைக்கழக மாணவர்கள் மூலமாக ஆராயக் கிடைத்தது.
மழை பெய்கின்றபோது அண்மைய சில வருடங்களாகத்தான் வெள்ளம் ஏற்படுவது போன்ற தோற்றம் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் இது 1998 லிருந்து வெள்ளத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.
சட்டவிரோத கட்டடங்களை கட்டுவதற்காக அக்குரணை பிரதேச சபையினால் இதுவரை காலமும் வழங்கப்பட்ட அனுமதியின் காரணமாகவே இந்த அனர்த்த நிலை ஏற்படுவதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
ஆறு மற்றும் நீரோடைகள் போன்றவற்றினை மறித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு இதுவரையில் 240 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அக்குரணை வரலாற்றில் ஒரே ஒரு தடவைதான் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் திரு. சிம்சான் என்பவர் அக்குரணை பிரதேச சபை தலைவராக இருந்துள்ளார். ஏனைய காலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளது. இவ்வாறான நிலையில் வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்றபோது முழு பழியையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது மாத்திரம் சுமத்துவது அரசியல் நோக்கங்கள் உள்ளதென்று சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற இஸ்திஹார் இனாமுதீன் அவர்கள் அக்குரணை பிரதேச தவிசாளராக இருந்தபோதும் ஏராளமான சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதாகவும் ஆனால் அவர்மீது எவரும் விரல் நீட்டி குற்றம் சுமத்துவதில்லை என்று கூறப்படுகின்றது.
அக்குரணை வெள்ள நீர் அனர்த்தம் வருவதிலிருந்து ஆரம்பகட்ட பாதுகாப்பு பெறுவதென்றால் மழை நீர் விரைவாக வழிந்தோடுவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்து சட்டவிரோத கட்டிடங்களும் உடைக்கப்படல் வேண்டும். அவ்வாறு நூற்றுக் கணக்கான கட்டிடங்களை உடைப்பதற்கு எந்தவொரு கட்டிட உரிமையாளர்களும் முன்வர மாட்டார்கள்.
அத்துடன் சட்டவிரோத கட்டிடம் கட்டுவதற்கு பிரதேச சபை தவிசாளர்கள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கினார்களா என்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments