Breaking News

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர்கள் அனுமதி - 2025.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவுக்கு 2025 புதிய கல்வி ஆண்டு ஷரீஆ பிரிவுக்கான நேர்முகப் பரீட்சை 2025/01/18ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு காஸிமிய்யா வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.


தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2025ம் ஆண்டு  பாடசாலை கல்வியில் 8ம் அல்லது 9ம் தரத்தில் கற்கக் கூடியோராகவும், அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும் இருத்தல் வேண்டும்.


தெரிவு செய்யப்படும் மாணவர்கள் மௌலவி அல்ஆலிம், க.பொ.த. சாதாரண தர, உயர் தர கல்விகளையும், கனணி அறிவையும் மத்ரஸாவிலேயே கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள தகுதியான திறமைச் சான்றிதழ்களைப் பெறுவர்.


விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 12/01/2025ம் திகதிக்கு முன்னர் தமது பெயர், முகவரி, பிறந்த திகதி, பாடசாலையில் இறுதியாக சித்தி அடைந்த தரம், தேக ஆரோக்கியம் ஆகிய விபரங்களுடன் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை கீழ் காணும் முகவரி, வாட்சாப் அல்லது நேரில் சமர்பிக்கவும். 


நேர்முகப் பரீட்சையின் போது  சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:


பிறப்பு அத்தாட்சிப்பத்திர மூலப்பிரதி, பாடசாலையில் இறுதியாக சித்தி அடைந்த வகுப்பின் தேர்ச்சி அறிக்கை,

பாடசாலையினதும் மஹல்லா மஸ்ஜிதினதும் பெறப்பட்ட ஒழுக்க சான்றிதழ், வேறு திறமைச் சான்றிதழ்கள்.


மேலதிக விபரங்களுக்கு 032 22 65 738 , 0756010034, 0774377788 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) தெரிவித்துள்ளார்.





No comments

note