புத்தளம் மாவட்ட இலக்கிய விழாவில் பாத்திமா பெண்கள் பாடசாலை 06 மாணவிகள் முதலிடம்
(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
புத்தளம் மாவட்ட இலக்கிய விழா போட்டியில் புத்தளம் பாத்திமா பெண்கள் மகா வித்தியாலய 06 மாணவிகள் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் இம் மாணவிகளுக்கான பரிசளிப்பு வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை (29/11/2024) ஆனமடுவ சுதம்பாய நகர மண்டபத்தில் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம் எஸ் பீ ஹேரத் தலைமையில் நடைபெற்றது
புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட பாத்திமா பெண்கள் மகா வித்தியாலய பாடசாலை மாணவிகள்
1 .சிறுகதை ஆக்கம் (ஆங்கிலம்) எம்.ஐ ஹம்தா
2.கவிதை ஆக்கம் (ஆங்கிலம்) ஆர். தனா தன்யா
3.கவிதை கூறல் (ஆங்கிலம்) எம்.என் எப் சீஸா
4.கவிதை கூறல் (ஆங்கிலம்) எம்.ஆர் றொஸ்மின் றபா
5. கவிதை.ஆக்கம் ( தமிழ் ) எம்.என் மர்யம் ஹிலா
6.பாடல் நயத்தல் ( தமிழ் ) எம்.எஸ்.எப் சப்காத்
ஆகியோருக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக தமது வாழ்த்துக்களை அதிபர் தெரிவித்துள்ளார்.
No comments