மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் - இதுவரை காணாமல் போன 06 மத்ரஸா மாணவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.
(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெள்ளம் காரணமாக மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் அதில் பயணித்த 11மத்ரஸா மாணவர்களில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. குறித்த ஆறு மாணவர்களையும் தேடும் பணிகள் இன்று (27) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன.
கடற்படையினருடன் இணைந்து சமுதாய தொண்டர் அமைப்புகளும் களத்தில் இணைந்து தேடும் பணிகள் தொடர்கின்றன.
No comments