Breaking News

இந்த தேர்தலில் அரசியல் தற்கொலையின்றி JVP யை எவ்வாறு ஆதரிக்கலாம் ?

பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரினால் மாத்திரமே இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்களில் சோஷலிச கொள்கையுடைய அனுரகுமார திசாநாயக்காவுக்கு நேரடியாக ஆதரவு வழங்கினோம். 


இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து பச்சை, நீலம் ஆகிய நிறங்களைக் கொண்ட முதலாளித்துவ தேசிய கட்சிகளே தொடர்ந்து மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. ஆனாலும் நாடு அபிவிருத்தி அடையவில்லை. மாறாக ஊழலும், இனவாத செயற்பாடுகளுமே மலிந்து காணப்பட்டது. 


ஊழலை ஒழித்து வளமான நாட்டை கட்டியெழுப்பப் போவதாக வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகவே சிங்கள மக்கள் மட்டுமல்ல சிறுபான்மை இன மக்களும் தங்களது பாரம்பரிய கட்சிகளையும், தலைவர்களையும் புறம்தள்ளிவிட்டு அனுரகுமார திசாநாயக்காவுக்கு நேரடியாக வாக்குகளை வழங்கினார்கள்.    


ஆனால் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலானது ஜனாதிபதித் தேர்தல் போன்றதல்ல. ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கவுக்கு பதிலாக வேறு ஒருவர் களம் இறங்கியிருந்தால் அவர் வெற்றி பெற்றிபெற்றிருப்பாரா என்பது சந்தேகமே. இங்கே வேட்பாளர் யார் ? எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்பது மிக முக்கியமானதாகும். 


நடைபெற உள்ள தேர்தலில் சிங்கள மக்களின் அதிகமான வாக்குகளினால் JVP யினர் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறான பாராளுமனறத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் வகிபாகம் மிகப் பிரதானமானது. 


தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சித் தலைவர்களுடன் அல்லது முக்கியஸ்தர்களுடன் உள்ள கோபம் அல்லது வெறுப்பு காரணமாக நேரடியாக JVP க்கு வாக்குகளை வழங்குவதானது அரசியல் தற்கொலைக்கு சமமானதாகும்.  


இன்றைய களநிலவரப்படி JVP யில் போட்டியிடுகின்ற தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் வெற்றிபெறுவதற்கான சாத்தியங்களை காணவில்லை. அதேநேரம் சிறுபான்மை கட்சிகளின் வாக்கு வங்கிகளும் சரிந்து காணப்படுகின்றது இதனால் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் வீழ்ச்சியடையக்கூடிய சாத்தியங்கள் உள்ளது.  


எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களது வாக்குகளை சிதறடிக்காமல் சிறுபான்மைக் கட்சிகள் மூலமாக அமைய இருக்கின்ற பாராளுமன்றத்தில் JVP க்கு ஆதரவு வழங்குவதன் மூலமாக சிறுபான்மையினரின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்க முடியும். 


முகம்மத் இக்பால் 

சாயாந்தமருது




No comments

note