ஜனாதிபதி தேர்தலில் JVP க்கு ஆதரவு வழங்கியதுபோன்று பாராளுமன்ற தேர்தலிலும் ஆதரவு வழங்கலாமா ?
கடந்த ஜனாதிபதி தேர்தல் ஆரம்ப பிரச்சாரத்தின்போது JVP (NPP) பற்றிய பிழையான புரிதல் இருந்தது அல்லது புரியவைக்கப்பட்டது.
அதாவது JVP யினர் பயங்கரவாதிகள், சர்வாதிகாரிகள், வன்முறையாளர்கள் என்பதே அந்தப் பிரச்சாரமாகும். இதனை முறியடிக்கும் வகையில் JVP யினர்களின் இடதுசாரிக் கொள்கை மற்றும் அவர்களது வரலாறுகளை தொடர் கட்டுரையாக எழுதியிருந்தேன். அவ்வாறு நான் எழுதியது JVP க்கு சாதகமான பிரச்சாரமாகவும் அமைந்தது.
JVP யின் இடதுசாரிக் கொள்கையில் எனக்கு ஏற்பட்ட கவர்ச்சியும் ஒரு காரணமாகும்.
அத்துடன் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பிரபல கராத்தே போதனாசிரியர்கள் குழுவினர் JVP க்காக பிரச்சாரம் செய்தனர். அதில் என்னையும் இணைத்துக் கொண்டதுடன், நான் தமிழ் மொழியில் எழுதிய கட்டுரைகளை சிங்கள மொழியில் சுருக்கமாக தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டனர்.
அது ஜனாதிபதி தேர்தல் என்பதனால் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக வரவேண்டுமென்று விரும்பினோம்.
ஆனால் தற்போது நடைபெற உள்ளது பாராளுமன்றத் தேர்தலாகும். இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளது.
எனவேதான் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்காவுக்கு ஆதரவு வழங்கியது போன்று கண்ணை மூடிக்கொண்டு உசார் மடையர்களாக பாராளுமன்றத் தேர்தலில் அவ்வாறு செய்ய முடியாது.
இன்ஷாஅல்லாஹ் இதுபற்றி விரிவாகவும், புத்திசாலித்தனமாகவும் எதிர்வரும் நாட்களில் ஆராய்வோம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது.
No comments