Breaking News

தமிழ் சமூகத்தின் பிரநிதிகள் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர செயற்குழுவை சந்தித்தனர்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் நகரைச் சேர்ந்த தமிழ் சமூகத்தின் பிரநிதிகள் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர செயற்குழுவை தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர அலுவலகத்தில் அண்மையில் சந்தித்தனர்.


புத்தளம் வாழ் தமிழ் சமூகம் முகங்கொடுக்கும் பல்வேறு விதமான பிரச்சினைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் கவனத்துக்கு தமிழ் சமூகத்தின் பிரதி நிதிகள் கொண்டு வந்தனர்.


இச்சந்திப்பில் புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்கள் தலைமையில் திருவாளர்களான சிவபாலன், முகுந்தன், சந்திரகாந்த், கோபிநாத் ஆகிய புத்தளத்தைச் சேர்ந்த தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.


குறிப்பாக வட மாகாணத்துக்கு வெளியே வாழும் புத்தளம் மாவட்ட தமிழ் சமூகத்தின் தேவைகள், அவர்களது குறைபாடுகள், பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட உயர்பீடத்துடன் விரிவாக கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்று ஏற்படுத்தித் தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக புத்தளம் செயற்குழுவினால் உறுதிமொழி வழங்கப்பட்டது.


புத்தளம் நகர குழுவில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத குறையை சுட்டிக்காட்டி, இச்சமூகப் பணியில் இணைந்து செயலாற்ற முன்வருமாறு தே.ம.சக்தி குழுவினர் அழைப்பை முன்வைத்தனர்.


மேலும், தே.ம.ச.வின் தேசிய நிறைவேற்றுச் சபை உட்பட பல்வேறு பீடங்களில் அங்கம் வகித்து பணியாற்றும் தமிழ் சமூகத்தினர் தொடர்பாகவும்  அறிமுப்படுத்தினர்.

 

இச்சந்திப்பில் தே.ம.ச. புத்தளம் மாவட்ட நிறைவேற்றுச் சபை  உறுப்பினர்களான ஹிஷாம் ஹுஸைன் மற்றும் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் நகர குழுத் தலைவர் எம்.ஏ.எம். ரியாஸ், செயலாளர் எம்.எல்.எம். சர்ராஜ் உட்பட நகர செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.





No comments

note