Breaking News

கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாராட்டு விழா.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாராட்டு விழா நிகழ்வுகள் அண்மையில் (10) பாடசாலை முதல்வர் கே.டி.ஹாரூன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றும், 75 வருட பாடசாலை வரலாற்றில் சாதாரண பரீட்சையில் 09 ஏ சித்தியைப் பெற்றும், புலமைப்பரிசில் பரீட்சையில் ஆறு  மாணவர்கள் சித்தியடைந்தும் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வுகளே நடந்தேறின.


அந்த வகையில் எப்.எப். ஹானிம் உயர் தர பரீட்சைக்கு தோற்றி கலைப்பிரிவில் அதி சிறந்த பெறுபேற்றுடன் மாவட்ட ரீதியில் முதலிடமும் பெற்று கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் தனது கல்விப்பயணத்தை தொடர தேர்வு செய்யப்பட்டிருப்பதுடன், எம்.எப்.முஹ்சினா என்ற மாணவி இஸ்லாமிய கற்கை துறையில் தனது கல்வியில் தடம் பதிக்க  தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருப்பது மட்டுமன்றி சில மாணவர்கள் ஆசிரியர் கல்வியியற் கல்லூரிக்கு தெரிவாகி இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.


மேலும் நடந்து முடிந்த  சாதாரண தரப் பரீட்சையில் ஏ.என்.எப். ஹம்தா எனும் மாணவி 09 ஏ சித்திகளைப் பெற்றிருப்பதுடன் ஏனைய மாணவர்களும் சிறந்த பெறுபேற்றுகளைப் பெற்றிருந்தனர்.


அத்துடன் சென்ற வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் எம்.எப்.சுஹா சைனப், என்.எப்.நஸீஹத், எஸ்.எப்.சாலிமா, எம்.ஏ.எப்.அபா, எஸ்.ஏ.பஹத், எஸ்.சிபா ஹானி ஆகிய ஆறு மாணவர்களும் சித்தியடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்திருந்தனர்.


இந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில், புத்தளம் வலயக்கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.ஜே. சுஜீவிகா சந்திரசேகர பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.


மாணாக்கரின் இவ்  அடைவுகளுக்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள்,

பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பாடசாலையின் பழைய மாணவர் மற்றும் மாணவியர் சங்க உறுப்பினர்கள், பள்ளிவாயல் தலைவர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர்கள், பெற்றார்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் கே.டி.ஹாரூன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.





















No comments

note