Breaking News

முஸ்லிம் உறுப்பினர்கள் எல்லோரும் ஊழல்வாதிகளா ? சமூகவலைத்தள பிரச்சாரம் ?

ஊழலில் ஈடுபடுகின்ற எந்தவொரு நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை. அதனாலேயே ஹமாஸ் இயக்கம் உட்பட பல போராட்ட இயக்கங்கள் ஊழலுக்கு எதிராக இறுக்கமான கொள்கையை பின்பற்றி வருகின்றது.  


கடந்த ஜனாதிபதி தேர்தலில் JVP யினர் ஊழலுக்கு எதிரான பரப்புரையை முன்வைத்துத்தான் அதிகாரத்தை கைப்பற்றினர். இன்றைய ஆட்சியை மக்கள் விரும்புவதுடன் வாழ்க்கைச்சுமை படிப்படியாக குறைவடையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்தகால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அதிகார துஸ்பிரயோகம், ஊழல், கொலை, காணாமல் போனமை போன்றவற்றுக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டத்தின்முன் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.   


ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது. ஆனால் இன்று ஊழல்வாதிகலென விரல் நீட்டப்படுபவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்களது குற்றம் நிரூபிக்கப்படாமலேயே “ஊழல்வாதிகள்” என்று தீர்ப்பு வழங்கி தண்டிக்கப்படுகின்ற இடமாக சமூக வலைத்தளங்கள் கானப்படுகின்றது. 


அதாவது தங்களது விரல்களை எடுத்து தங்களது கண்களை குத்திக்கொள்ளும் சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் நடந்தேறுகின்றது.  


“சிஸ்டம் சேஞ்” என்ற போர்வையில் அனுபவமுள்ள அரசியல்வாதிகள் அனைவர்மீதும் வசைபாடுகின்ற நிலை காணப்படுகின்றது. குறிப்பாக தனக்கு அரச தொழில் அல்லது தனிப்பட்ட தேவையை பூர்த்திசெய்யாத பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் என அனைவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.     


குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் முகநூல்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டால் அவர்களுக்கு ஊழல்வாதிகள் அல்லது வேறுவிதமாக தொடர்ந்து வசைபாடுவதுடன், ஒருவரைப் பார்த்து இன்னுமொருவர் கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. 


ஊழல்வாதிகள் எவராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். அவ்வாறில்லாமல் தங்களுக்கு மனதில் உள்ள குரோதத்தை வெளிப்படுத்தி பழிவாங்கும் நோக்கில் அனைவரையும் ஊழல்வாதிகள் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது நல்லதல்ல. இப்படிப்பட்டவர்கள் இறைவனுக்கு அச்சப்படாதவர்கள். அது பூமராங் போன்று வேறுவகையில் அவ்வாறானவர்களை தண்டிக்கும்.  


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note