Breaking News

கற்பிட்டி ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எம் இன்பாஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ எம் சனூன்)

ஜனநாயக ஐக்கிய முன்னணி சார்பாக கற்பிட்டியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான ஏ.எம் இன்பாஸ் எதிர்வரும்  பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.


இது பற்றி கருத்து தெரிவித்த ஏ.எம் இன்பாஸ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக ஐக்கிய முன்னணி இரட்டை இலை சின்னத்தில் நாடு பூராவும் போட்டி இடுவதற்கு தீர்மானித்துள்ளது.


நாடு முழுவதும் கணிசமான வாக்குகளை எமது கட்சி நிச்சயமாக பெறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது இதன் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு எமது கட்சிக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.




No comments