Breaking News

கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் வகுப்பறை கட்டிட திறப்பு விழா

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட தரம் 09 மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அருஸின் முயற்சியின் ஊடாக வேர்ல் விஷன் நிறுவனத்தின் 50 வீத பங்களிப்புடன் ஊர் தனவந்தர்களின் உதவிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தின் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அருஸ் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் விசேட அதிதியாக கற்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எம் ஜவாத் கௌரவ அதிதிகளாக வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் வடமேல் மாகாண திட்டமிடல் முகாமையாளர் மற்றும் பாலாவி வேர்ல்ட் விஷன் நிறுவன முகாமையாளர் சுபுன் சம்மிக்க பீரிஸ் ,  தில்லையூர் பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி றிப்கான் (றஹ்மானி),  கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் யூ.எம்.எம் அமீர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 


கற்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகளில் மிகவும் வறிய மக்கள் வாழும் தில்லையூர் மற்றும் தேத்தாவாடி கிரமங்களின் மாணவர்களை அதிகமாக கொண்ட இந்த பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெரிதும் பங்களிப்பு செய்து வரும் தில்லையூர் பள்ளிவாசலின் தலைவர் அன்வர்தீனுக்கு நன்றி தெரிவித்த பாடசாலையின் அதிபர். பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் மற்றும் பழைய மாணவர்கள்,  பெற்றோர்கள், ஊர் நலன்விரும்பிகள் என பலரினதும்  பல்வேறு உதவிகள் மூலம் இந்த தரம் 09 மாணவர்களுக்கான வகுப்பறை கட்டி முடிக்கப்பட்டுள்ளதனை அதிபர் தனதுரையில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)















No comments

note