Breaking News

அகில இலங்கை பாடசாலை ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அரை இறுதிக்கு தகுதி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்).   

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தட்ட போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 20 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணி கால் இறுதி போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


அனுராதபுரத்தில் 11, 12 மற்றும் 13ம் திகதிகள் இடம்பெற்று வரும் போட்டிகளில் தேசிய ரீதியில் பலம் பொருந்திய மாவனெல்லை சாஹிரா தேசிய பாடசாலை  மற்றும் கிழக்கு மாகாணத்தில் செம்பியனாக திகழும் கிண்ணியா மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணிகளை வென்ற கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட அணி கால் இறுதியில் இன்று (13) கந்தானை  டி மெசிநோட் கல்லூரியை பெனால்டி உதைகள் மூலம்  4 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.  


இவ் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வழி நடாத்தும்  விளையாட்டு பொறுப்பாசிரியர் கே.எம் றிஷாத் ,பைசல் மற்றும் ரியாஜ் உதைபந்தாட்ட அணி வீரர்கள் அனைவருக்கும் பாடசாலையின் நிராவாக்குழு சார்பாக  தமது வாழ்த்துக்களை பாடசாலையின் அதிபர் யூ.எம்.எம் அமீர் தெரிவித்துள்ளார்.



No comments

note