புத்தளத்தில் மிக விமரிசையாக இடம்பெற்ற கவிஞர் புத்தளம் மரிக்கார் முதன் முதலாக எழுதியுள்ள இரு நூல்களின் வெளியீட்டு விழா வைபவம்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
கவிஞர் புத்தளம் மரிக்கார் முதன் முதலாக எழுதியுள்ள இரு நூல்களின் வெளியீட்டுவிழா புத்தளம் நகரில் சனிக்கிழமை இரவு (05) மிக விமரிசையாக இடம்பெற்றது.
புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி ஷாமில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமை வகித்தார்.
எட்டு நிறுவனங்கள் இணைந்ததான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் "ரகசியங்கள்" , "மைத்துளிகள் மரணிப்பதில்லை" ஆகிய இரு நூல்களே வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமத் கலந்து கொண்டார்.
விசேட அதிதிகளாக வலம்புரி கவிதா வட்டம் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன், புத்தளம் ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர், வரலாற்று ஆய்வாளர் இஸட்.ஏ.சன்ஹீர், கவியரங்க நெறியாளர், தமிழ்த் தென்றல் கவிஞர் எஸ்.எம்.அலி அக்பர், கவிஞர், சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், வலம்புரி கவிதா வட்டம் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கெளரவ அதிதிகளாக கவிஞர், பன்னூலாசிரியர் கலாபூஷணம் ஜவாத் மரிக்கார், கவிஞர், நாடகக் கலைஞர் அப்துல் லதீப், இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகம் தலைவர் நெய்னார் இம்ரான், எழுத்தாளர், பன்னூலாசிரியர் ஸாக்கிரா இஸ்ஸதீன், அரசாங்க தகவல் திணக்கள முன்னாள் தகவல் அதிகாரி கலாபூஷணம் நூருல் அய்ன், சங்கக்கவி கிண்ணியா அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையினை புத்தளம் எக்ஸலன்ஸ் பாடசாலை அதிபர் எச்.அஜ்மல் நிகழ்த்தியதோடு தலைமையுரையினை அஷ்ரப் சிஹாப்தீன் நிகழ்த்தினார்.
"மைத்துளிகள் மரணிப்பதில்லை" என்ற நூலின் நயவுரையை ஓய்வு நிலை உதவிக்கல்விப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீரும், கவி வாழ்த்துக்களை கவிஞர் ரஷீத் எம்.இம்தியாசும் நிகழ்த்தினர்.
"ரகசியங்கள்" எனும் நூலின் நயவுரையினை கவிஞர் எஸ்.எம்.அலி அக்பர் நிகழ்த்தினார். இதன் கவி வாழ்த்தினை இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்த்தினார்.
முதல் பிரதியை புத்தளத்தின் சமூகவியலாளர் தொழிலதிபர் சங்கர் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டதையடுத்து ஏனையோருக்கும் விஷேட பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் ஏற்புரையினை நூலாசிரியர் கவிஞர் புத்தளம் மரிக்கார் நிகழ்த்தினார்.
விஷேட உரையினை புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) நிகழ்த்தினார்.
நிகழ்ச்சித் தொகுப்பினை புத்தளம் ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் ஏ.என்.எம். பாத்திமா ரிஸ்கியா மற்றும் ஊடகவியலாளர் எம்.எச். முஹம்மத் ஆகியோர் வழங்கினர்.
No comments