Breaking News

முஸ்லிம் என்ற இனவாதமும், பேரினவாதமும்

முஸ்லிம் என்று தனது இனத்தின் பெயரை உச்சரித்தால் அது இனவாதம் என்ற புரளி சமூகவலைத் தளங்களில் புதிதாக பரப்பப்பட்டு வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. இனவாதத்திற்கும், பேரினவாதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் தெரியாததுதான் இதற்கு காரணமாகும். 


இனவாதம் என்பதற்கு தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி அவர்கள் கூறியுள்ள விளக்கமாவது “தனது இனத்தின் மீது பற்றுதல் வைத்து தனது இனத்துக்காக குரல் கொடுப்பது இனவாதமென்றும், இன்னுமொரு இனத்தின்மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு அவர்களை அழிக்க அல்லது அச்சுறுத்த முற்படுவது பேரினவாதமென்றும்” குறிப்பிட்டுள்ளார்.    


மேற்கூறப்பட்ட கலைஞரின் விளக்கத்தின் மூலமாக இனவாதம் என்றால் என்னவென்று  புரிந்திருக்கும். 


கடந்த காலங்களில் பொதுபலசேனா போன்ற தென்னிலங்கை இனவாத சக்திகளின் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகள் பேரினவாதமாகும். அதனாலேயே அவர்களை “சிங்கள பேரினவாத சக்திகள்” என்று அழைத்தோம். 


முஸ்லிம் என்று அழைப்பதை வேண்டத்தகாத வார்த்தையாக கருதுபவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவித பிரயோசனமும் இல்லாத அப்பாவிகள் அல்லது சமூகத் துரோகிகள் என்று கருத முடியும். 


எனவே நாங்கள் இன்னுமொரு சமூகத்தின்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பேரினவாதிகளாக ஒருபோதும் இருந்துவிடக் கூடாது. 

அதேநேரம் எமது இனத்தின் இருப்புக்காகவும், அடையாளத்துக்காகவும், உரிமைக்காகவும், தனித்துவத்திற்காகவும் குரல்கொடுக்கின்ற இனவாதிகளாக விழிப்புடன் இருப்போம்.     


முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது




No comments

note