கற்பிட்டி கென்சிங்டன் எகடமி தனியார் கல்வி நிறுவனத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டம்
கற்பிட்டி கென்சிங்டன் எகடமி தனியார் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இவ் வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர் தின கொண்டாட்டம் எகடமியின் வளாகத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய கென்சிங்டன் எகடமியின் நிறைவேற்று பணிப்பாளர் ஆசிரியர் எம்.எஸ்.எம் ஹிஸ்மி குறிப்பிடுகையில்;
ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெறும் நிலையில் ஆசிரியர்கள் என்பவர் எப்போதும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்கள் என்பதுடன் மாணவர்கள் என்பவர் ஒரு புத்தகத்தின் வெற்று தாள்களாகும் அதனை எழுத்தாகவும் முழுமை பெற்ற ஒரு புத்தகமாகவும் மாற்றும் சக்தியாகவும் ஆசிரியர்கள் காணப்படுகின்றன ஆசிரியர் என்பவர் மெழுகு வர்த்தியை போல தான் உருகி ஏனையவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பவர்களாக என்றும் திகழ்கிறார்கள் எனவும் தனதுரையில் குறிப்பிட்டார்
அத்தோடு ஆசிரியர்களுக்கான பாரம்பரிய போட்டி நிகழ்ச்சிகள் , பாடல்கள் மாணவர்களின் வாழ்த்துரைகள் வாழ்த்துப் பாடல்கள் என மகிழ்விக்கும் நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன் ஏற்பாட்டுக் குழு மாணவர்களால் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசில்கள் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ.எம் சனூன்)
No comments