Breaking News

கற்பிட்டியின் நீண்ட நாள் தேவையாக காணப்படும் ஜனாஸா வாகனம் தொடர்பான கலந்துரையாடல்

கற்பிட்டி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக ஜனாஸா வாகனத்தின் தேவைப்பாடு காணப்பட்டு வருகின்றது  இதனைக் கருத்தில் கொண்டு விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர்  ஜே.எம் தாரீக் இல்லத்தில்  இடம்பெற்றது.


இதில் கலந்து கொண்ட கற்பிட்டி ஜனாஸா சங்கத்தினர் கற்பிட்டிக்கு  ஜனாஸா வாகனத்தின் தேவை  நிலை அறிந்து அதற்கான வாகனம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் முனைப்போடு கற்பிட்டி ஜனாஸா சங்கம் வேலைத்திட்டத்தை மேற்க் கொண்டு வந்தது எனினும் உலகை ஆட்டிப் படைத்த கொரோனாவின் காரணமாக மேற்படி வேலைத்திட்டம் கிடப்பில் போடப்பட்டமை பற்றிய விளக்கத்தினை  சமூகமளித்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன்  தற்போது கற்பிட்டி பிரதேசத்திற்கு ஜனாஸா வாகனத்தின் தேவைப்பாடு அவசியமாக உள்ள நிலையில் இவ் வேலைத்திட்டத்தை முன் கொண்டு செல்வதற்கு  சங்கத்தின் சகல அங்கத்தவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.


மேற்படி  கலந்தூரையாடலில் கற்பிட்டி ஜனாஸா சங்கத்தின் அங்கத்தவர்களுடன்  கற்பிட்டியில் உள்ள நலன்விரும்பிகள் சமூக சேவையாளர்கள் ஆசிரியர்கள் அரச உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள் என பலரும்  கலந்து கொண்டதுடன் முதற் கட்டமாக ஜனாஸா வாகன கொள்வனவிற்கான குழு ஒன்று தெரிவு  செய்யப்பட்டது  ஜனாஸா வாகனத்திற்கான முழுமையான தொகையினை 2024 டிசம்பருக்குள்  பெற்றுக்கொள்ள முடியும் எனவும் 2025 ஜனவரியில் கற்பிட்டி பிரதேசத்திற்கான ஜனாஸா வாகனம் சேவையில் ஈடுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும்  குழுத் தலைவர்  ஜே.எம் தாரீக் தெரிவித்தார் .


மேலும் கூட்டத்திற்கு வருகை தந்த வர்கள் தாமாக முன் வந்து  நன்கொடைகளாக சுமார் பத்து இலட்சம் வழங்கியதுடன்ஈஈ கற்பிட்டி ஜனாஸா சங்கத்தின் மூலம் ஏற்கனவே பெற்றுக்ஜனனன்அந கொள்ளப்பட்ட நன்கொடை பணம் ஐந்து இலட்சத்தையும்  மேற்படி குழுவிற்கு வழங்குவதாகவும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ.எம் சனூன்)











No comments

note