புத்தளம் ஐ.எப்.எம்.முன்பள்ளியில் மாணவர்களை மகிழ்விக்கும் நிகழ்வு.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
வடமேல் மாகாண முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்றம் மாகாணத்திலுள்ள பிரதான நகரங்களில் இயங்கும் முன் பள்ளிகளில் ஒன்றை தெரிவு செய்து அங்குள்ள மாணவர்களை மகிழ்விக்கும் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஓர் அங்கமாக புத்தளம் நகரில் இயங்கும்
முன்பள்ளிகளில் மிகவும் பழைமை வாய்ந்த, தமிழ் மொழி மூல முதலாவது முன்பள்ளியான ஐ.எப்.எம்.முன்பள்ளி தெரிவு செய்யப்பட்டதோடு அங்கு பயிலும் மாணவர்களை மகிழ்விக்கும் நிகழ்வானது புதன்கிழமை காலை (23) ஐ.எப்.எம். முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது.
முன்பள்ளியின் பொறுப்பாசிரியை ரூசி சனூன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமேல் மாகாண முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்றத்தின் உதவி பணிப்பாளர் திருமதி. தம்மிகா கலந்து கொண்டார்.
புத்தளம் நகர சபையின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி தயானி சுமனலதா, நகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி திருமதி ரதி, கற்பிட்டி முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி திருமதி. ரூபிகா, புத்தளம் முன்பள்ளி ஆசிரியைகள் அமைப்பின் தலைவி அமிதா எதிரிசிங்க, செயலாளர் நிலங்கா தில்ருக்ஷி, பொருளாளர் பாத்திமா சிபானா உள்ளிட்ட வடமேல் மாகாண முன் பிள்ளை பருவ அபிவிருத்தி மன்றத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதோடு சகல மாணவர்களுக்கும் அதிதிகளினால் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வருகை தந்த அதிதிகளுக்கு முன்பள்ளி பொறுப்பாசிரியை ரூசி சனூன் அன்பளிப்புக்களையும் வழங்கி வைத்தார்.
No comments