Breaking News

வில்பத்து ஊடாக மன்னார் செல்லும் ;பாதையை திறக்கும்படி ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு

வடக்கு மன்னார் முசலி மற்றும் பிரதேச மக்கள் தமது சொந்த  பிரதேசத்திற்கு பன்னெடுங்காலமாக பிரயானம் செய்து வந்த வில்பத்து ஊடக மருச்சிக்கட்டு, முசலி மன்னார் சென்றுவந்த பாதை கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டு இருக்கின்றது.

 

ஜனாதிபதி அருனகுமார திசாநாயக்க கொழும்பில் கடந்த காலங்களில் 20 வருடமாக மூடி வைத்துள்ள பாதைகளை மீளதிறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது போன்று வடக்கு மக்கள் நலன்கருதி வில்பத்து வனப்பிரதேசங்கள் ஊடாக மன்னார் செல்லும் பிரதான பாதையாக உடனடியாக திறந்து வைக்கும்படி ஜனாதிபதிக்கு இன்று 08.10.2024 மகஜர் கையளிப்பு.


வவுனியா சிறைக்கைதிகள் மேற்பார்வையாளர் குழுவின் தலைவரும் சமுக ஆர்வளருமான மொஹம்மட் நிப்ராஸ் அடங்கிய குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை 08 ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மேற்படி பாதையை திறந்து வைக்கும்படி கோரிக்கை விடுத்து; மகஜரொன்றை ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் சுனில் குமாரிடம் கையளித்தார்கள் அவர் அக்கடிதத்தினை கையேற்று ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளதாக  மொஹமட் நிப்ராஸ் கருத்து தெரிவித்தார்.


கடந்த  காலங்களில்  இப்பிரதேசத்தில் சில அரசியல்வாதிகள் சுற்றுலாத்துறை வேறு பல அவர்களது தனிப்பட்ட வருமானம் மேற்கொள்ளும் வகையில் இப்பாதையை மூடிவைத்துள்ளனர்.   இதனால்  சாதாரண பொது மக்கள் இவ் பாதை ஊடகா பிரயாணம் செய்ய முடியாமல் பல்வேறு இன்னல்களை எதிர்;நோக்குகின்றனர்.


வடகிழக்கு யுத்தத்தின் பின்னர் சமாதான காலத்த்தில் இப் பாதை திறக்க்பபட்டன மீளவும்  10 வருடங்களாக  மூடப்பட்டுள்ளது. எனவும் நிப்றாஷ்  தெரிவித்தார்.


புதிய ஜனாதிபதி வாக்களித்த மக்கள் சார்பாக இக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். பொதுத் தேர்தலுக்கு முன்னர் இவ்  மீள திறந்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம் வடக்கு மற்றும் மன்னார் பிரதேச  மக்கள்; பல மணிக்கணக்கில் பிராயாணத்த்திற்காகவும் அனுராதபுர ஊடகா பாரிய செலவினையும் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் நிப்ராஸ் கருத்து தெரிவித்த்தார்.


 (அஷ்ரப் ஏ சமத்)




No comments

note