புத்தளம் தாருஸ்ஸலீம் குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வின் பரிசளிப்பு விழா.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் வெட்டாளை மத்ரஸது தாருஸ்ஸலீம் குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வின் பரிசளிப்பு விழா அண்மையில் (18) புத்தளம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினரும், மத்ரஸது தாருஸ்ஸலீமின் அதிபருமான அஷ்ஷேக் ஹஸ்பான் (ஸாபிதீ) தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) கலந்து கொண்டார்.
இந்த கலை கலாச்சார போட்டி நிகழ்ச்சிகளில் சுமார் 365 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். தெரிவுப் போட்டிகள் இடம்பெற்று முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் தெரிவு செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
போட்டிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் முதலிடம் பெற்றதன் விளைவாக அவர்களுடைய பெற்றோர்கள் மத்ரஸாவிற்கு பெரிய வைட் போட் ஒன்றினையும் அன்பளிப்பாக வழங்கினர்.
மத்ரஸா நிர்வாக சபை தலைவர் எச்.ஏ.ஜப்பார், ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உலமா விவகார உப குழுவின் தலைவர் அஷ்ஷேக் ஸனூஸ் (ரஹ்மானி), உப செயலாளர் அஷ்ஷேக் இமாம்தீன் (அஷ்ரபீ), பிறை உப குழு தலைவர் அஷ்ஷேக் ரகீப் அஹ்மத் (ரஷாதி), மத்ரஸாவின் பெயர் தாங்கி நிற்கின்ற அதிபரின் தந்தை எம்.ஏ.எம்.சலீம், மத்ரஸா முஅல்லிமா பின்த் பாறூக் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments