Breaking News

புத்தளம் யூத் விஷன் அமைப்பினர் புத்தளம் விஷேட பிரிவு கல்வி நிலையத்தின் மாணவர்களுடன் சிறுவர் தினத்தை கொண்டாடினர்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

"சமூகத்துக்கான பார்வை" எனும் கருப்பொருளில் இயங்கி வரும் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான 1998 (சா/த), மற்றும் 2001 (உ/த) "யூத் விஷன்" அமைப்பினருக்கு  சிறுவர் தினத்தை (01) புத்தளம் நகர சபையின் கீழ் சவீவபுரம் பகுதியில் இயங்கி வருகின்ற "மாற்று திறனாளிகளுக்கான மத்திய நிலையத்தில்" (Desability Resource Centre) அங்கு கல்வி பயிலும் விஷேட தேவையுடையவர்களுடன்  பகிர்ந்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியது.


யூத் விஷன் அமைப்பினர் அம்மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்கி, அவர்களை உற்சாகமூட்டி சிறுவர் தினத்தில் அவர்களை மகிழ்வித்தனர்.


யூத் விஷன் அமைப்பின் புதிய தலைவர் அப்துல் பத்தாஹ் தலைமையில் இந்த குழுவினர் விஜயம் செய்தனர்


பல்வேறு தேவைகளை எதிர்பார்த்துள்ள இக்கல்வி நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட விரும்பும்  தனவந்தர்கள், நலன் விரும்பிகள் புத்தளம் நகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி திருமதி ரதி அவர்களை  076 7055222 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் யூத் விஷன் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

















No comments

note