மீனவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
புத்தளம் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட மீனவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலையினை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை ஒன்று கற்பிட்டி ஆணைவாசல் தனியார் விடுதியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கற்பிட்டி இணைப்பாளர் ஜே பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் தொற்றா நோய்கள் பற்றிய தெளிவூட்டல்களும் மனிதனின் உணவு பழக்கவழக்கங்கள் பற்றிய விளக்கங்கள் என்பவற்றுடன் முதல் உதவி பற்றிய செயன்முறைப் பயிற்சிகள் கற்பிட்டி தள வைத்தியசாலையில் கடமை புரியும் தாதி உத்தியோகத்தரான பி. பிரபா (RN,RM,DENO) வினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அவருடன் உதவியாளராக ஆர் பி எஸ் ஜீவந்த (MA) வும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வானது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மீனவக் கொள்கை பிரிவின் பொறுப்பதிகாரி திரு நாலக்கவின் அனுசரணையில் இடம்பெற்றதுடன் புத்தளம் மாவட்ட செயற்பாட்டாளர் எம். ஹிஜாஜ் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments