Breaking News

அகில இலங்கை பாடசாலைகள் தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் நரக்களி ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவன் டெவின் மெரிஷான் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

அகில இலங்கை பாடசாலைகள் தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் மல்யுத்த போட்டியில், 18 வயதின் கீழ் 65 கி.கி. எடைப்பிரிவில் போட்டியிட்ட புத்தளம் நரக்களி ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவன் டெவின் மெரிஷான் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை தனதாக்கி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.


இந்த தேசிய மட்ட விளையாட்டு போட்டிகள் அண்மையில் (27-30 வரை) திகன உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


இதன் போது மல்யுத்தம் போட்டிகளில் நரக்களி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பங்குபற்றினர்.


இலங்கையின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட்டு மாணவர்களான கெவின், ஜெரோன், சஞ்சய, பிரதீப் மற்றும் யதுர்ஷன் ஆகியோர் காலிறுதி வரை முன்னேறி இருந்தனர்.


பாடசாலை அதிபர் ஜே.ஏ.எஸ். அமல்ராஜ் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலையில்  ஆரம்பிக்கப்பட்ட "பாடசாலை மல்யுத்த கழகத்தின்" பயிற்றுவிப்பாளராக முன்னாள் சர்வதேச மல்யுத்த வீரர் லசந்த பர்ணாந்து செயற்படுவதோடு பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர் யூ.எச்.எம்.பர்ஹான் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மது அஸ்லிப் ஆகியோர் மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க பூரண ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்


தேவையான மேலதிக ஆலோசனைகளை கல்பிட்டி கோட்ட உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் முஹம்மது பளீல்  வழங்குவது குறிப்பிடத்தக்கது.


போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஆசிரியர்கள் வழங்கி வருகின்றமை பாராட்டத்தக்கது.









No comments

note