நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அகில இலங்கை மட்டத்தில் மேலுமொரு சாதனை.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
கண்டி திகன உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு மத்தியிலான மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் நுரைச்சோலையைச் சேர்ந்த நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் முகம்மது சியாம் முகம்மது அர்கம் 71 கிலோ எடைப்பிரிவில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இம்மாணவன் தனது பாடசாலைக்கும் தனது நுரைச்சோலை நகருக்கும் பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளார்.
நுரைச்சோச்சோலை பாடசாலை வரலாற்றில் விளையாட்டுத்துறையில் ஏலவே தங்கப்பதக்கம் ஒன்றினை தனதாக்கி "தங்க மகன்" என்ற பெருமையை பெற்ற இம்மாணவன் மிகக்குறுகிய காலத்தில் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்று மீண்டும் ஒரு முறை “தங்க மகன்” என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி தனது தாய் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் கடந்த 2023 ல் நடைபெற்ற போட்டியில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கத்தையும், கடந்த மாதம் இடம்பெற்ற போட்டியின் போது முதலாமிடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் இத்துறையில் சர்வதேச மட்டத்தில் மேலும் சிறப்பிக்க பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், நலன் விரும்பிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
No comments