பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை) யின் மீலாதுன்நபி இறுதி நாள் நிகழ்வு.
(கற்பிட்டி எம். எச். எம். சியாஜ், புத்தளம் எம்.யூ.எம். சனூன்)
புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் மீலாதுன் நபி விழாவின் இறுதி நாள் நிகழ்வு வியாழக்கிழமை (10) பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம் தௌபீக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பெரிஸ்டர் நெய்னா மரைக்கார் பவுன்டேசனின் ஸ்தாபக தலைவர் அப்துல் ஹசீப் நெய்னா மரைக்கார் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் ஏ.எச்.எம் றியாஸ், அதன் செயலாளர் எம்.சீ.எம் தாவூத், பாடசாலை அபித்திச் சங்கச் செயலாளரும், முந்தல் மதுரங்குளி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம் ஹாரூன், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.எம் ஜெஸீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேய் எம்.ஏ.எல். எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி), கனமூலை முஸ்லிம் மகா விததியாலயத்தின் அதிபர் பீ.எம். முஸ்னி, கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் கே.டீ. ஹாரூன், கடையாமோட்டை பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் எம்.டீ. பாரி (ஓய்வு நிலை), பழைய மாணவரும், பாடசாலையின் முதல் சட்டத்தரணியுமான ஏ. எச். நூஹ்மான், மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. ஜீ. விக்கிரமரநத்ண ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்கள் ஜாயா, அஸீஸ், அக்பர் என மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு மீலாதுன் நபி விழா போட்டிகள் இடம்பெற்றது. இதில் அக்பர் இல்லம் முதலாம் இடத்தையும், ஜாயா இல்லம் இரண்டாம் இடத்தையும், அஸீஸ் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. அவர்களுக்கான கிண்ணங்கள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மற்றுமோர் அங்கமாக 2019 தொடக்கம் 2023 வரை காலப்பகுதியில் விஞ்ஞானப் பிரிவு, வர்த்தகப் பிரிவு மற்றும் கலைப் பிரிவில் பாடசாலையின் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 165 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 A சித்திகளைப் பெற்று சானைப் படைத்த 06 சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
நிகழ்ச்சிகள் யாவும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன (SLBC) சிரேஷ்ட அறிவிப்பாளர் ஜுனைத் எம். ஹாரிஸ் மற்றும் பாடசாலையின் ஆசிரியர் ஏ. சீ.எம். நௌபீல் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
🔴 Live Stream Facebook Madurankulimedia
https://www.facebook.com/share/v/3v9Hih4a9tXApNtq/
🔴 Live Stream Youtube Madurankulimedia
https://www.youtube.com/live/fpUx_tm4jh4?si=ADfjfjGpfXEYjd3w
No comments