Breaking News

புத்தளம் நகரின் புகழ் பூத்த காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் புதிய அதிபராக அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) நியமனம்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் நகரின் புகழ் பூத்த காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் புதிய அதிபராக அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) செவ்வாய்க்கிழமை (01) காலை தனது கடமை பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.


புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் இதுவரை காலமும் அதிபராக கடமையாற்றிய அஷ்ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் ஓய்வு பெற்றதையடுத்து அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) அதிபராக பொறுப்பேற்றள்ளார்.


அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் அரபுக்கல்லூரி, காஸிமிய்யா அரபுக்கல்லூரி ஆகியவற்றில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வந்தவர்.


புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் புத்தளம் நகர ஜம்இயத்துல் உலமாவின் முன்னாள் தலைவரும், புத்தளம் ஜனாஸா நலன்புரிச்சங்கத்தின் தலைவரும், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் 1980 க.பொ.த.சாதாரண தர பழைய மாணவர் குழுவினரான 80 ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ் அமைப்பின் அங்கத்தவரும் அதன் ஆலோசகரும் ஆவார்.


நாடறிந்த மார்க்க சொற்பொழிவாளரான இவர் அண்மையில் வபாத்தான புத்தளம் நகரின் பிரபல தமிழ் பாட வாத்தியார் ஹாலிது மாஸ்டரின் சிரேஷ்ட புதல்வரும் ஆவார்.




No comments

note