Breaking News

நாட்டில் 52 சதவீதமாக உள்ள பெண்களை பொருளாதாரத்தில் வலுவூட்டலே இன்றைய தேவை கற்பிட்டியின் இணைப்பாளர் கலாபூஷணம் ஜே பத்மநாதன்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ.எம் சனூன்)

நாட்டின் சனத்தொகையில் 52 சதவீதமாக காணப்படும் பெண்களை பொருளாதார ரீதியில் பலம் மிக்கவர்களாகவும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக்கூடியவர்ளாகவும் வலுவூட்டுதல் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது என உலக உணவு தினத்தை (ஒக்டோபர் 16)  முன்னிட்டு பிரஜா அபிலாசை திட்டத்தின் ஊடாக புத்தளம் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் அனுசரணையில் கற்பிட்டி ஆனைவாசல் கிராமத்தில் உள்ள சதா சரன பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவி எஸ்.தயாணி ரொசில்டா தலைமையில்  இடம்பெற்ற  ஒன்றுகூடலில் கலந்து கொண்டு விசேட உரையாற்றிய நெப்ஸோவின் கற்பிட்டி இணைப்பாளர் கலாபூஷணம் ஜே பத்மநாதன் தெரிவாத்தார்.


அவர் தொடர்ந்து தனதுரையில் தெரிவித்ததாவது; 

அந்தோடு உணவு உற்பத்தியிலும் கவனம் செலுத்தும் வண்ணம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் வகையில் அவர்களுக்கான வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான பயிற்சிகள் இரசாயனங்கள் அற்ற இயற்கை முறையிலான கிரிமி நாசினிகள் மற்றும் கொம்போஸ் பசளை தயாரிப்பு பயிற்சிகளை வழங்கி பெண்களை பலப்படுத்துதல் என்பனவற்றை நோக்கங்களாக கொண்டு எமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


மேற்படி நிகழ்வின் போது கலந்து கொண்ட சகல பெண்களுக்கும் வீட்டுத்தோட்டத்திற்கான மரக்கறி விதைகள் வழங்கப்பட்டதுடன் சதா சரன பெண்கள் அமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுயதொழில் மேற்கொண்டு வரும் ஒரு சுய தொழிலாளியை வலுவூட்டும் முகமாக சுயதொழில் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.











No comments

note