புத்தளம் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகள், 15 சுயேட்சை குழுக்கள் என மொத்தம் 429 வேட்பாளர்கள் போட்டி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் 08 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர் இவர்களை தெரிவு செய்வதற்கு 663,673 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று (11) நண்பகல் 12 மணிவரை புத்தளம் மாவட்ட செயலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது
அதன்படி அரசியல் கட்சிகள் 26 வும், சுயோட்சைக் குழுக்கள் 18 வும் அடங்களாக மொத்தம் 44 கட்சிகள் வேட்புமணுத்தாக்கல் செய்திருந்தன. இதில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளான சிங்கள தீப ஜாதிக பெரமுன மற்றும் சமபீம கட்சி ஆகிய இரண்டும் மீரா மொஹைதீன், செய்னுதீன் மரைக்கார் இல்ஹாம், மற்றும் ஜீ.ஜீ.எல்.எஸ் பிரசன்ன ஆகியோர்களின் தலைமையிலான சுயோட்ச்சை குழுக்கள் மூன்று அடங்களாக ஐந்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவும் 24 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்
புத்தளம் மாவட்ட செயலாளரும், புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பி. ஹேரத் தெரிவித்தார்.
இதன்படி இம்முறை புத்தளம் மாவட்டத்தில் 08 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 429 வேட்பாளர்கள் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
No comments