ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் படுகொலை மற்றும் லெபனானில் இஸ்ரேலின் யுத்தக் கெடுபிடி - மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டனம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தஹியே மீதான இஸ்ரேலிய விமான குண்டு வீச்சில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் படுகொலை செய்யப்பட்டதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிப்பதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் விடுத்துள்ள கண்டனச் செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
உயிர்த் தியாகம் புரிந்துள்ள அஷ் ஷஹீத் ஹசன் நஸ்ரல்லாஹ் அவர்களின் குடும்பத்தினர், அவரது சகாக்கள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், லெபனான் மீதான சரமாரியான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலை நாங்கள் வன்மையாக வற்புறுத்துகின்றோம்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் அங்குஏற்கனவே 700 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் லெபனானையும் இஸ்ரேல் குறிவைக்கத்தொடங்கியிருப்பதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
அஷ் ஷஹீத் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை பலஸ்தீனம் மற்றும் லெபனானில் மடடுமல்லாது, முழு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மிகவும் கவலையளிக்கூடிய விதத்தில் இடம் பெற்றிருப்பதோடு,அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் வெறியாட்டத்தினால் பிராந்தியத்தில் பாரதூரமான விளைவுகள் ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகின்றது.
ஹிஸ்புல்லாஹ் தலைவர் நஸ்ரல்லாஹ் மற்றும் தியாகிகளான அவரது அமப்பினரின் பங்களிப்பு காஸாவை விடுவிப்பதில் மட்டுமல்லாது, பாலஸ்தீனத்தில் பரவலாக நடந்து வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகளாவிய கவனத்தைக் குவிப்பதிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இன்றுள்ள சூழ்நிலையில்,இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் அந் நாட்டின் ஆக்கிரமிப்புகளுக்கு முகம்கொடுக்கும்வகையில் ஹமாஸ்,ஹிஸ்புல்லாஹ் போன்ற இயக்கங்கள் தொடர்ந்தும் போராடுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
எல்லா துயரச் சம்பவங்களுக்கும் அப்பால் பாலஸ்தீனத்தின் மீட்சிக்கான எங்களது ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்றுள்ளது.
The Sri Lanka Muslim Congress and I strongly condemn the killing of the Hezbollah Chief Hassan Nasrallah killed in an Israeli airstrike in the Lebanese capital, Beirut’s southern suburb, Dahiyeh. While conveying our condolences to the martyred Nasrallah, his family and his comrades we also strongly call upon Israel to stop its bombardment of Lebanon. We deeply regret that Israel has also begun to target Lebanon where 700 people have already been killed, under Israeli attacks. The death of Nasrallah is marked with more worrisome consequences for not only Palestine and Lebanon but also for the entire Middle East, plunging the region into a deeper level of violence.
We continue to stand by our strong support for the cause of Palestine and its beleaguered, dead and dying people in the face of war crimes unleashed on them by Israel.
No comments