நுரைச்சோலை பாடசாலையில் மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
நுரைச்சோலை தேசிய பாடசாலையில் அதிகரித்துவரும் மாணவர் தொகையினால் ஏற்பட்டிருக்கும் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமுகமாக ஐ.எஸ்.ஆர்.சீ. நிறுவனத்தினால் ஒதுக்கப்பட்டிருந்த ஆறு வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வெள்ளிக்கிழமை (06) அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் இடம்பெற்றது.
இந்த வைபவத்தின் பிரதம அதிதியாக ஐ.எஸ்.ஆர்.சீ. நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் மிஹ்லார் அவர்களின் புதல்வர் கலந்துகொண்டிருந்தார்.
இந்த வைபத்தில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியருடன், பாடசாலை அபிவிருத்தி சங்க முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
ஐ.எஸ்.ஆர்.சீ. இன் இந்த திட்டத்தில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கு மேலதிகமாக கலாச்சார மண்டபமும் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments