அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புளிச்சாக்கும் கிளையின் பொதுக்கூட்டம்
(புளிச்சாக்குளம் - புதுக்குடியிருப்பு என்.எம் ஹபீல் (கபூரி, JP)
புத்தளம் மாவட்டம் புளிச்சாக்குளம் கிளையின் 2024ம் ஆண்டு புதிய நிர்வாகத் தெரிவின் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுக்கூட்டம் அ.இ.ஜ.உலமா புத்தளம் மாவட்டம் மற்றும் புளிச்சாக்குளம் கிளையின் தலைவரான அஷ்ஷெய் எம்.எம். தமீம் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் 2024 செப்டம்பர் மாதம் 16ம் திகதி காலை 07 மணி முதல் புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித் (மர்கஸ்) வளாகத்தில் நடைபெற்றது.
தலைவர் அவர்களால் வரவேற்புரையும் தலைமை உரையும் நிகழ்த்தப்பட்டதுடன் எமக்கென நிரந்தரமாக ஓர் இருப்பிடம் அமைப்பெற வேண்டும் என்பதாகவும் எமது பகுதியில் இருக்கம் மூத்த ஆலிம்கள் கெளரவிக்கப்பட வேண்டும் எனவும் இன்னும் பல விடயங்களை தலைவர் அவர்கள் மூலம் ஞாபகப்படுத்தப்பட்டதோடு தாராக்குடிவில்லு முஸ்லிம் பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் நியாஸ் (நளீமி) அவர்களால் சில விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
அதே போன்று ஜம்இய்யாவின் செயளாலர் அஷ்ஷெய்க் நாஸிர் (ரஷாதி) அவர்களினால் புளிச்சாக்குளம் ஜம்மியத்துல் உலமா தோற்றம் பற்றிய வரலாறு முன்வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உலமாக்களுக்கிடையே கலந்துரையாடல் உப தலைவர் ரபாயுதீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது அதில் முக்கிய விடயங்களாக மூத்த உலமாக்களை மஸ்ஜித் இமாம் முஆத்தீன்களை கெளரவிப்பதற்கான திகதி முடிவெடுக்கப்பட்டதுடன் எமக்கென்று நிர்தத்தரமாக கட்டிடம் அமைப்பதற்காக 25 இலட்சம் பெறுமதியான காணி கொள்வனவு செய்ய முடிவெடுக்கப்பட்டு சபையிலே சமூகம் தந்த உலமாக்காளால் 6 இலட்சம் ரூபா பணமாகவும் சேகரிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அஷ்ஷெய்க் அன்வர் ஸாதாத் (மனாரி) அவர்களினால் உலமாக்கள் சமூகத்துடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சிறப்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
இறுதியாக பொருளாளர் அஷ்ஷெய்க் ஹபீல் (கபூரி) அவர்களால் கணக்கறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் இருதியாக வருகை தந்த ஆறூரை சேர்ந்த அனைத்து உலமாக்களுக்கும் எமது ஜம்இய்யாவின் முன்னாள் தலைவர் அஷ்ஷெய்க் சரிபுதீன் (ரஹ்மானி) ஹஸ்ரத் அவர்களால் நன்றி உரை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments