Breaking News

பன்முக ஆளுமை கொண்ட ஆசிரியர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார் - ஏ.எச்.பௌசுல் - ஆசிரியர்

பன்முக ஆளுமை கொண்ட ஆசிரியர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.


அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) யின் ஓய்வு என்பது எம்மிடத்தில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் இவரின் இக்கல்விப் பணி அக்கறைப்பற்றுக்கு மாத்திரமன்றி இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் ஒரு உன்னதமான பங்களிப்பைச் செலுத்தியவர். என்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.  அதற்கு மேலதிகமாக அக்கறைப்பற்று பிரதேசத்தைப் பொறுத்தமட்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய புத்தி ஜீவிகளில் முக்கியமான ஒருவராவார். இவர் இம்மண்ணில் பல தலைசிறந்த மாணவர்களை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த ஒரு உன்னதமான ஆசிரியராவார். அதுமாத்திரமன்றி இப்பிராந்திலயே காணப்படக்கூடிய தலை சிறந்த பாடசாலைகளை வழிநடத்துவதில் சகல வல்லமையும் கொண்டவராவார். எவ்வாறு இருந்த போதிலும் எமது முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பிரபல்யமான ஒரு கலாசாலையை வழிநடத்துவதற்காக இவரை மனமுவந்து வழியனுப்புவதில் நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.


இவ்வேளையிலயே அவரின் ஓய்வு குறித்து அவர் தொடர்பாக ஒரு சில வரிகள் அவரது வாழ்க்கை வரலாறை தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.


இவர் புத்தளம்  - சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிந்த அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) கடந்த 2024.08.21 ஆம் திகதி அரச பணியிலிருந்து முன்பணி நிறைவில் ஓய்வு பெற்றார்.


இவர் கனமூலையைச் சேர்ந்த மர்ஹும்களான அப்துல் லத்தீப் மற்றும் பக்கீர் முஹம்மத் சித்தி ராபியா  ஆகியோரின் தம்பதிகளுக்கு 1976 ஆம் ஆண்டு இரண்டாவது பிள்ளையாக பிறந்த இவர் தனது  ஆரம்பக் கல்வியை பு/ பள்ளிவாசல் துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று பின்னர்  தரம்  3 தொடக்கம் 11 ஆம் தரம் வரை பு/ கொத்தாந்தீவு  முஸ்லிம் மகா வித்யாலயத்தில் கல்வி கற்றார். க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று (1993 -1999) தனது உயர் தர கல்வியை  பேருவளை ஜாமிஆ நளீமியா கலா பீடத்தில் கற்று நளீமி பற்றம் பெற்றுக் கொண்டார். 


2000 ஆம் ஆண்டு கலைப்பட்டதாரியாக (பேராதனை பல்லகலைக்கழகம் வெளிவாரி) பட்டம் பெற்று 2000- 2003 ஆணடு வரையான காலப்பகுதியில் ஜாமிஆ நளீமியாவில்  உதவி நூலகராக கடமையாற்றியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து  2003.08.01ஆம் திகதி முதல் ஆசிரியர் நியமனம் கிடைக்கப்பெற்று பு/ கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையேற்றார்.


தனது சொந்த ஊரான கனமூலை பாடசாலையில் மிகச்சிறப்பாக சேவையாற்றி விட்டு 2015 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று பு/அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலம் (பெருக்குவட்டான்) பாடசாலையில் இணைந்து கொண்டார். அங்கு சுமார் எட்டு வருடங்கள் (2015 - 2023) சேவையாற்றிய அவர் அங்கிருந்து இடமாற்றம் பெற்று அல் - மிஸ்பாஹ் முஸ்லிம் மகா வித்தியாலயம் (மாதம்பை) சென்று சிறிது காலம் சேவையாற்றி விட்டு அங்கிருந்து இடமாற்றம் பெற்று பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிந்து 2024.08.21 ஆம் திகதி அரச பணியிலிருந்து முன்பணி நிறைவில் ஓய்வு பெற்றார். இவர் அரச பணியில் சுமார் 21 வருடங்கள் சேவை புரிந்துள்ளார்.


2006 ஆம் ஆண்டு பட்ட பின்படிப்பு கல்வி டிப்லோமி (PGDE)  நிறைவு செய்த இவர் 2017 ஆம் ஆண்டு சமூகவியல் முதுமானி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 2021 ஆம் ஆண்டு மனித  உரிமைகள் மற்றும்பல்கலாச்சாரத்துவம் முதுமானி பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.


எதிர்காலத்தில் இவரது எண்ணங்களை அல்லாஹ்தஆலா நிவர்த்தி செய்வதோடு அவர் தொட்ட பணிகள் எல்லாம் சிறக்க வாழ்த்துகிறேன்.


வாழ்த்துபவன்

ஏ.எச்.பௌசுல் - ஆசிரியர்

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)




No comments

note