Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் ஓய்வு பெற்ற தமிழ் பாட ஆசிரியர் ஹாலித் மாஸ்டர் அவர்கள் காலமானார்.

புத்தளம் - அல்ஹஸனாத் பள்ளி மஹல்லா, அல்ஹஸனாத் வீதி, மூன்றாவது ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்து வந்தவரும், ஓய்வுபெற்ற தமிழ் பாட ஆசிரியருமான  எம்.ஐ.எம். ஹாலித் மாஸ்டர் அவர்கள் இன்று (16) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும்களான மொஹிதீன் இப்றாஹீம் மரைக்கார், தங்கச்சி பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹுமா ஹாஜியானி சறாப்பு நாச்சியா அவர்களின் அன்புக் கணவரும், மர்ஹும்களான அப்துல் ஒபூர், சப்ரா பீவி, சுலைஹா  ஆகியோரின் சகோதரரும்,


புத்தளம் - இஸ்லாஹிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான, அஷ்ஷெய்க்  எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), அப்துல் மதீன், புத்தளம், ஸைனப் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் மில்ஹான், ஜப்ரிஸ் பெட்ரோல் செட் முகாமையாளர் முளப்பர், மஸாஹிரா, புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி, அலுவலக உத்தியோகத்தர் சீனத்துல் முனவ்வரா, ஸாஹிரா தேசியப் பாடசாலை ஆசிரியை முஜீபா ஆகியோரின் அன்புத் தந்தையும், A.M. செய்னுல் ஆப்தீன், B. செய்னுல் ஆப்தீன், ஆசிரியர் தாஜுல் முனீர், உஸைரா, சிதாரா, உம்மு அதிய்யா, சமீரா ஆகியோரின் அன்பு  மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  நாளை (18) செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்கு  புத்தளம் - பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 



இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் 

ஊடகவியலாளர் -

எம்.யூ.எம். சனூன்





No comments

note