Breaking News

அஷ்ஷைக் முஹமத் சஜீத் முஹமத் மஸிஸ் நூரீ- மதனீ கல்வி உளவியல் துறையில் முதுமானி பட்டம் பெற்றார்.

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள மதீனா-இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அஷ்ஷைக் ஸஜீத் அவர்கள் 10/09/2024 அன்று செவ்வாய்க்கிழமை தனது

القدرة التنبؤية للدافعية العقلية بالتحصيل الأكاديمي لدى طلاب الجامعة الإسلامية بالمدينة المنورة

(மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களிடையே கல்வி சாதனைக்கான மன உந்துதலின் முன்கணிப்பு திறன்- பல்வகை கலாச்சார ஒப்பிட்டு ஆய்வு 

( The ability of mental motivation to predict academic achievement among students at the Islamic University of Madinah: A cross-cultural study)

எனும் முதுமானி ஆய்வை சமர்ப்பித்து, மூவர் கொண்ட பரீட்சைக் குழுவால் சிறப்பாக விவாதிக்கப்பட்டு முதல் தர அதி சிறந்த பெறுபேறு வழங்கப்பட்டது மாத்திரமின்றி அவர்களால் கௌரவிக்கப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ்


இவர் இலங்கை, புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்பிட்டி நகரை பிறப்பிடமாகக் கொண்டதோடு முஹமத் மஸிஸ், ஹலீமா தம்பதியினரின் அன்பு புதல்வுமாவார். தனது ஆரம்ப பாடசாலைக் கல்வியை கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில்  கற்ற இவர் பின்னர் புனித அல்குர்ஆனை திறம்பட மனனமிட்டு சிறந்த ஹாபிழாக திகழ வேண்டும் எனும் நோக்கில் கல்பிட்டியில் அமையப்பெற்றுள்ள ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் சேர்ந்து தனது உயரிய நோக்கத்தை அடைந்து ஹாபிழாக பட்டம் பெற்று வெளியேறினார்.


தொடர்ந்து மார்க்கக் கல்வியை முறையாக கற்கும் பொருட்டு, கல்வியில் பல உயர் அடைவுகளை அடைந்து சிறந்து விளங்கும் குருநாகல்-நூரிய்யா அரபுக் கல்லூரியில்  இணைந்து ஆலிம் கற்கைநெறியைத் தொடர்ந்து குறித்த கற்கைநெறியை நிறைவு செய்து விஷேட சித்தியுடன் ஆலிமாக பட்டம் பெற்று வெளியேறினார். 


அத்தோடு தான் கற்ற கல்வியை கற்பிக்கும் பேரவாவுடன் தான் கற்ற கலாசாலையில் ஆசிரியராகவும், நிர்வாக அதிகாரியாகவும் சில வருடங்கள் கடமையாற்றினார்.


பின்னர் துருக்கியில் அமைந்துள்ள பல்கலைக்கழகமொன்றுக்கு 2013 ஆம் ஆண்டு தெரிவானார், அங்கு கற்றுக்கொண்டிருக்கும் வேளையில் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு 2016 ஆம் ஆண்டு தெரிவாகி அங்கு அகீதா மற்றும் தஃவா  எனும் பீடத்தில் கற்பதற்குத் தகுதியும் பெற்றெதோடு சிறப்பாகக் தனது கற்கையை முன்னெடுத்து 2019ம் ஆண்டு தனது இளமாணி பட்டப்படிப்பை விஷேட சித்தியுடன் நிறைவு செய்தார்.


இளமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த ஷைக் ஸஜீத் நூரீ- மதனீ அவர்களது கல்வித் தாகம் மேற்படிப்பை நோக்கி நகர ஆரம்பித்ததையடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கிடையில் " கல்வி உளவளத்  துறைக்காக" நடைபெற்ற முதுமாணி தகுதிகாண் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து முதுமாணி கற்கைக்குத் தெரிவாகி, 2025ம் ஆண்டுக்கான தனது முதுமாணி ஆய்வை முன்கூட்டி சமர்ப்பித்து முதல்தர சிறந்த பெறுபேறுடன் முதுமாணி பட்டப்படிப்பை 10/09/2024 அன்று நிறைவுசெய்தார்.  


இவர் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் போற்றுமளவு அனைவருடனும் பண்பாக பழகும் வண்ணம் அழகிய குணங்களை தன்னகத்தே கொண்ட பல திறமைகளுள்ள ஒரு சிறந்த ஆளுமை மட்டுமல்லாது மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலுள்ள இலங்கை மாணவர் ஒன்றியத்தின் மஷூரா சபை, இணக்கப்பாட்டு சபை ஆகியவற்றின் ஆலோசகராகவும் திகழ்ந்து வருகிறார். 


இவர் தமிழ், ஆங்கிலம், அரபு, துருக்கி போன்ற பல மொழிகளில் புலமை பெற்றவர் மட்டுமல்லாது, சிறந்த சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும் காணப்படுகிறார்.


முதுமானி கற்கைக் காலப் பிரிவில் இவர் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வந்ததோடு தற்போது சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. 


இவரது இவ்வளர்ச்சிக்கும் அடைவுக்கும் வழி வகுத்த அல்லாஹ்வை போற்றிப் புகழ்வதுடன், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், அதிபர், ஆசியர்கள் (உஸ்தாத்மார்கள்), மத்ரஸா உட்பட நண்பர்கள்,மனைவி, குடும்பத்தார், உறவுகளையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வது சாலச்சிறந்ததாகும்.


இலங்கைக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்த்து தன்னை இறைக் கல்விக்காக அர்ப்பணித்துள்ள கலாநிதி அஷ்ஷைக் முஹமத் சஜீத் முஹமத் மஸிஸ் நூரீ- மதனீ அவர்களை போற்றிப் புகழ்வதுடன் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் இதே வேளை வல்லவன் அல்லாஹ்விடம் இவரது கல்விப் பாதை மென்மேலும் சிறக்கவும், இவரது அறிவின் மூலம் ஏனைய மக்களும் பயனடைய வழி வகுக்க வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.


الحمد لله الذي بنعمته تتم الصالحات أولا وآخرا

تهانينا الحارة لكم على إكمال دراستكم العليا وحصولكم على الماجستير! إنجاز رائع يعكس تفانيكم وجهودكم الكبيرة.

و نفتخر بإنجازاتكم العلمية ونتمنى لكم مستقبلًا مشرقًا ومليئًا بالنجاح والتألق.


நட்புடன்

அஸ்ஹான் ஹனீபா

19/09/2024




No comments

note