Breaking News

முன்னோடி பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்கள் கௌரவிப்பு.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

நுரைச்சோலை தேசிய பாடசாலையில் "ஹசனாத்" ஆரம்ப பிரிவின் 05 ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களில், மாகாண முன்னோடி பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும்  முன்னோடிப் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு  பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 


செவ்வாய்க்கிழமை (10) காலை அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம். ஜவாத் கலந்து கொண்டார். 


இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் அதிபர் எம்.ஐ.எம். இம்ரான்கான் தலைமையில், தரம் 5 வகுப்பாசிரியர்கள், "ஹஸனாத்" ஆரம்பப்பிரிவின் ஆசிரியர்கள், மேலதிக வகுப்புகளுக்கு உதவி வழங்கிய ஆசிரியர்கள், கல்வியதிகாரிகள் போன்றோரின் ஆலோசனை வழிகாட்டலுடன், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், பெற்றார்கள், நலன் விரும்பிகள், நன்கொடையாளர்கள் போன்றோரின் அனுசரனையுடன் நடைபெற்று முடிந்துள்ளன.


அதனடிப்படையில் இம்முறை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான  வேலைத்திட்டங்கள், பரீட்சைகள், பாராட்டு நிகழ்வுகள் போன்றவற்றை  உள்ளடக்கிய “ப்ராஜக்ட் 90” மற்றும் “டார்கட் டீ”, திட்டமிடல்களுடன் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.


இவ்வேலைத்திட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை திட்டமிடல் இணைப்பாளராக அதிபருடன் பயணித்த பழைய மாணவர் சங்க உபதலைவர் எம்.ஆர்.எம்.சமீம் இதன் போது  பாராட்டப்பட்டார்.


“டார்கட் டீ” வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.










No comments

note