Breaking News

எல்லை மீறி செலவிட்டால் பதவி பிரஜா உரிமை இல்லை வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை

(நமது நிருபர்)

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சட்டத்தை மீறி அதிகமாக செலவிட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களின் ஜனாதிபதி பதவி பறிக்கப்படுவதுடன் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களின் பிரஜா உரிமையும் நீக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். 


ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் நிகழ்வு ஒன்றின் போது அவர் இத்தகவலை தெரிவித்தார்.


மேலும் தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தமது கணக்கு விபரங்களை அறிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறு உரிய காலத்தில் தனது கணக்கில் விவரங்களை அறிவிக்காத வேட்பாளர்களுக்கும் ஒரு வாக்காளருக்கான செலவை 109 ரூபாவுக்கு மேலதிகமாக செலவிட்டவேட்பாளர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.


மேலும் இக்கணக்கு வழக்கு விபரங்கள் இவ்விபரங்கள் பொதுமக்களின் பார்வைக்காக பத்திரிகைகள் மற்றும் வெப் ஊடகங்களில் காட்சிப் படுத்தப்படும் வெற்றில் முறைகேடுகள் ஏதாவது இருப்பின் நாட்டின் எந்தப் பிரஜையும் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து வழக்கு தொடர்ந்து குற்றம் உறுதிப்படுத்தப் பட்டால் அவர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் அவர் தெரிவித்தார்.






No comments

note