Breaking News

கற்பிட்டி ஸ்ட்ராட்ஃபோர்ட் இன்டர்நேஷனல் கல்லூரியில் இடம்பெற்ற முதலாவது மாபெரும் கண்காட்சி

(கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி ஸ்ட்ராட்ஃபோர்ட் இன்டர்நேஷனல் கல்லூரியின் முதலாவது மாபெரும் கண்காட்சி ஒன்று திங்கட்கிழமை ( 30) காலை 9மணியில் இருந்து மாலை 5 மணிவரை  பாடசாலையில் இடம்பெற்றது.


கல்லூரியின் அதிபர் ரம்சானி பேகம் தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் அதிதிகளாக ஓய்வு பெற்ற கற்பிட்டி 

 அல் அக்ஷா தேசிய பாடசாலையின் அதிபர் எம் எம் எம் ரோஸ் புகாரி , ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.டி.எம் பைறுஸமான்,  வை.எம்.எம் ஏ கற்பிட்டி கிளையின் ஆலோசகர் எச்.எம் சுஹைப் , தலைவர் ஏ.எச்.எம்.எம் ஷாபி  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


பாடசாலை மாணவர்களின் இணை பாடவிதான செயற்பாடுகளின் அங்கமாக உள்ள திறமைகள் மற்றும் புதிய படைப்புகளை வெளிப்படுத்தும் நோக்கோடு தொடர்புபட்ட மேற்படி கண்காட்சி நிகழ்வு, கல்வி மற்றும் கலாச்சார விழுமியங்களை கொண்டதாக அமைந்திருந்தமை விசேட அம்சமாகும். 


மேற்படி நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சகல தரப்பினருக்கும் தமது  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கல்லூரியின் அதிபர் ரம்சானி பேகம்  தெரிவித்துள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.










No comments

note