Breaking News

"கவியருவி லங்கா புத்ர தேச பந்து" விருது பெற்றார் மருதமுனை ஷிபானா அஸீம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனமும் இணைந்து, ஐக்கிய சுயதொழில் வியாபாரிகள் சங்கம் மற்றும் எமது நாட்டின் சகல கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் தேசிய கலை அரண் ஏற்பாட்டில் மிக பிரமாண்டமான கௌரவிப்பு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (16) நடைபெற்றது.


தமிழ் மொழி மற்றும் சகோதர மொழிக் கலைஞர்களின் 

திறமை, உள்ளார்ந்த சிறப்பு, சிறந்த சேவைகளில் தமது துறைக்கேற்றவாறு கெளரவிப்பு இங்கு இடம் பெற்றது.


"வாழும்போதே வாழ்த்துவோம்"  என்ற தொனிப்பொருளில்

தேசிய கலைஞர்களுக்கு கெளரவமளிக்கப்பட்ட இந் நிகழ்வில், மருதமுனையைச் சேர்ந்த கல்முனை பொது நூலகத்தில்  நூலக உதவியாளராகப் பணிபுரியும் ஷிபானா அஸீம் இலக்கியத்துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புகளுக்காக

"லங்கா புத்ர, தேசபந்து கவியருவி" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


சர்வதேச மனித உரிமை பேரவையின் தலைவர் பிரதீப் சார்லஸ் இவ்விழாவுக்கு கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு, விழாவுக்காக சர்வதேச பௌத்த சம்மேளத்தினையும் இணைத்து அனுசரணை வழங்கினார்.


இவ்விழாவை சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் கலை மற்றும் சமூகப் பணியாற்றி வரும் "கண்ணகி கலாலயம்" தமது ஐக்கிய தொழில் வியாபாரிகள் சங்கம் இவர்களோடு "தேசிய கலையரண்" ஒன்றிணைந்து ஏற்பாடுகளைச் செய்ததோடு, இவ்வமைப்புகளின் தலைவர் ஏ.கே. இளங்கோ மற்றும் உப தலைவர் ஏ. சுரேஷ் அவர்களோடு இணைந்து அதன் திட்டத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் முன்வைத்தார்.





No comments

note