Breaking News

களுத்துறை நகரில் மாபெரும் இலவச உயர்கல்வி, தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

மாணவர்களுக்கு சரியான கல்வி வழிகாட்டல்களை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துவது ஒரு சமூக கடமை ஆகும். சர்வதேச ரீதியில் அவர்களை தயார்படுத்தி எதிர்கால சவால்களை முறியடிக்கக்கூடிய வகையில் அவர்களை உருவாக்க வேண்டியுள்ளது.


இதனை கருத்தில் கொண்டு களுத்துறையில் அமைந்துள்ள சமூக தொண்டு நிறுவனமான களுத்துறை அபிவிருத்தி அமைப்பு (கே.டீ.சி) மற்றும் அமேசன் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து  ஞாயிற்றுக்கிழமை (08) களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் காலை 9:30 முதல் 12:30  வரை இலவச உயர்கல்வி, தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதில் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) மாணவர்களும், பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்கள், உயர்கல்வி மற்றும் தொழில் தேடுகின்றவர்களும் கலந்து கொள்ள முடியும்.


இந்த நிகழ்வுக்கு பிரதான வளவாளராக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர் கல்வி நிறுவன பணிப்பாளருமான கலாநிதி இல்ஹாம் மரிக்கார் வருகை தரவுள்ளார்.


இது முற்றிலும் இலவசமான நிகழ்ச்சியாகும், பெற்றோர்களும் வருகை தருவது மிகவும் பொருத்தமானதாகும். வருகை தரும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.




No comments

note