Breaking News

கவிஞர் புத்தளம் மரிக்கார் முதன் முதலாக எழுதியுள்ள இரு நூல்களின் வெளியீட்டு விழா.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்


இலங்கை தேசிய வானில் பிரகாசிக்கும் இலக்கிய உறவுகளின் வருகையில், கவிஞர் புத்தளம் மரிக்கார் முதன் முதலாக எழுதியுள்ள இரு நூல்களின் வெளியீட்டுவிழா புத்தளம் நகரில் இடம்பெறவுள்ளது.


இந்த நிகழ்வானது அக்டோபர் மாதம் 05 ம் சனிக்கிழமை மாலை 06.15 மணிக்கு புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி ஷாமில் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. 


சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்


பிரதம அதிதியாக

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமத் கலந்து கொள்ளவுள்ளார்.


விசேட அதிதிகளாக 

வலம்புரி கவிதா வட்டம் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன், புத்தளம் ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர், வரலாற்று ஆய்வாளர் இஸட்.ஏ.சன்ஹீர், கவியரங்க நெறியாளர், தமிழ்த் தென்றல் கவிஞர் எஸ்.எம்.அலி அக்பர், கவிஞர், சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், வலம்புரி கவிதா வட்டம் செயலாளர் இளநெஞ்சன்  முர்ஷிதீன், புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


கெளரவஅதிதிகளாக 

கவிஞர், பன்னூலாசிரியர் கலாபூஷணம் ஜவாத் மரிக்கார், கவிஞர், நாடகக் கலைஞர் அப்துல் லதீப், இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகம் தலைவர் நெய்னார் இம்ரான், எழுத்தாளர், பன்னூலாசிரியர் ஸாக்கிரா இஸ்ஸதீன், அரசாங்க தகவல் திணக்கள முன்னாள் தகவல் அதிகாரி கலாபூஷணம் நூருல் அய்ன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


நிகழ்ச்சித் தொகுப்பினை புத்தளம் ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் ஏ.என்.எம். பாத்திமா ரிஸ்கியா மற்றும் ஊடகவியலாளர் எம்.எச். முஹம்மத் ஆகியோர் வழங்கவுள்ளனர்.


இந்த நிகழ்வில், அழகிய மாலையில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கவிஞர் புத்தளம் மரிக்கார் அன்போடு அழைப்பு விடுக்கின்றார்.






No comments

note