தேசிய அங்கீகார விருதை பெற்றுக் கொண்ட புத்தளம் புழுதிவயல் பைஸானா பைரூஸ் !
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
சிறந்த எழுத்தாளருக்கான "இலக்கியச் சுடர் லங்கா புத்ர தேசபந்து" தேசிய அங்கீகார விருதை புத்தளம் புழுதிவயல் பைஸானா பைரூஸ் பெற்றுக் கொண்டார்.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் என்பன இணைந்து கண்ணகி கலாலயம் , ஐக்கிய சுயதொழில் வியாபாரிகள் சங்கம் மற்றும் நாட்டின் சகல கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் தேசிய கலை அரண் ஏற்பாட்டில் மிக பிரமாண்டமாக இலங்கையிலுள்ள பல்துறை கலைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதன் போதே புத்தளம் புழுதிவயல் பைஸானா பைரூஸ் இந்த விருதினை பெற்றுக்கொண்டார்.
இதில், பல்துறை கலைஞர்களுக்கு தேசிய அங்கீகாரம் வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் இளம் வயதிலேயே இவ்வாறான ஒரு கெளரவ விருதினை நாமத்தை பெற்று கொண்டுள்ளார். இவர் 2020 முதல் இன்று வரை எழுத்து துறையில் கட்டுரை , சிறுகதை , கவிதைகளை எழுதி வருகின்ற அதேவேளை அண்மையில் " டுவன்டி ப்ளஸ் " என்ற கவிதைத் தொகுப்பை வெளியீடு செய்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
No comments