கவிஞர் புத்தளம் மரிக்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளத்தின் கவிஞர், பாடலாசிரியர், குறும்பட இயக்குனர், ஊடகவியலாளர் போன்ற பன்முக ஆளுமை கொண்ட, புத்தளம் எஸ்.ஏ.சீ.பீ. மரிக்கார் அவர்கள் "கலாபூஷண , லங்கா புத்ர, தேசபந்து" என்கின்ற கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைக் குழுப் பேரவை, இலங்கை தேசிய கலை அரண் மற்றும் பெளத்த சம்மேளனத்தின் ஏற்பாட்டில் "வாழும்போதே வாழ்த்துவோம்" என்ற தொனிப்பொருளில் தேசிய கலைஞர்களைக் கெளரவிக்கின்ற நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போதே கவிஞர் புத்தளம் மரிக்கார் இந்த விருதினை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களது தொழிற் சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்ன பிரிய மற்றும் இன்திக விஜய் ரத்ன, மாநகர முதல்வர் சுஜிவ, மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் சுனில் பெரேரா தமிழ் கலைஞர்களின் சங்கத்தின் தலைவர் இளங்கோ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மூன்று கட்டங்களாக பல்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதன் போது சிரேஷ்ட மற்றும் இளம் கலைஞர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், சிற்ப கலைஞர்கள், ஒப்பனையாளர்கள், ஊடகவியலாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், நடிகர்கள், நல்லிணக்க மத குருமார்கள், தொழில் சார் நிபுணர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள், உடையலங்கார கலைஞர்கள் என பல்துறை சார்ந்த சுமார் 600 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
No comments