சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுடைய மாபெரும் கைத்தொழில் கண்காட்சியும் மலிவு விற்பனையும்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் நடாத்தப்பட இருக்கின்ற சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுடைய மாபெரும் கைத்தொழில் கண்காட்சியும் மலிவு விற்பனையும் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் (06, 07ம் திகதிகளில்) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களுடைய பாரம்பரியமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள்,
சவர்க்கார வகைகள், ஸ்க்ரீன் பிரிண்டிங், அலங்கார பொருட்கள், ஆடை வகைகள், மூலிகைச் செடிகள், பூ மரங்கள் மற்றும் உணவு வகைகள் என பெண்களுடைய பல்வேறு உற்பத்தி பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட இருப்பதோடு விற்பனையும் செய்யப்பட இருக்கின்றன.
வெள்ளிக்கிழமை (06) காலை 09 மணியளவில், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஜுவைரியா தலைமையில்
நடைபெறவுள்ள இதன் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மற்றும் புத்தளம் மாவட்ட செயலகத்தின் தொழில் துறை அபிவிருத்தி சபை பிரதி பணிப்பாளர் ஜயந்த பிரேம்குமார ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
பெண்களுடைய உற்பத்தி பொருட்களை வாங்குவதன் மூலமாக அவர்களது பொருளாதார முன்னேற்றத்தில் பங்கு கொள்வதற்காக இந்த இரண்டு நாள் கண்காட்சி மற்றும் விற்பனை கூடத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைப்பு விடுக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.
No comments